பொருளாதார மந்தநிலை: குழந்தைகளைக் கொன்று தம்பதியர் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரம் உள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8வது மாடியில் வசித்து வரும் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளை வீட்டில் கொன்றுள்ளனர்.


பின்னர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில் நசிந்து, நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காவல் துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.