பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள “காவலன்” மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பாலியல் ரீதியான தொந்தரவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இது பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. அதேசமயம் பெண் மருத்துவர் விவகாரத்தில் தெலங்கானா போலீஸ் விரைந்து செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழக போலீசாருக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”ஆபத்து என்று அழைப்பு வந்தால் போலீசார் உடனடியாக உதவ வேண்டும். புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து நேரத்தை வீணாக்கக் கூடாது