கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் என்ற அந்த இளைஞர் குடியுரிமை திருத்தச் சட்டம்,

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

டிக்டாக்கில் சீமானை மிரட்டிய புள்ளிங்கோ...

இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றையும் வாட்ஸ் அப்பில் அவர் வெளியிட்டிருந்தார். இது வைரலாகி சர்ச்சையை உண்டாக்கியது.

இதுதொடர்பாக, கர்நாடக மாநிலம் விட்டல் காவல் நிலையத்தில் யதீஷ் என்பவர் புகார் அளித்திருந்தார். அதில், "பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதத்தில் அன்வர் பேசியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.