வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், இன்று ஆவேசமாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அளிக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு என்றபடியால், நேரடியாக ஈரான் தாக்குதலுக்கு கண்டனத்துடன் தொடங்கினார் டொனால்ட் ட்ரம்ப்.

ஆனால், ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்கர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. இங்கு அமெரிக்காவின் படைவீரர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். படைத்தளங்களில் சிறிய பாதிப்பு மட்டும் ஏற்பட்டுள்ளது” என்று தெளிவுபடுத்தினார்.

உலகம் முழுக்க அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.